Saturday, April 18, 2026
Homeசெய்திகள்RSS, R&AW தடை – அமெரிக்கா பரிந்துரைக்கும் நிலையில் மத்திய அரசின் பதில்

RSS, R&AW தடை – அமெரிக்கா பரிந்துரைக்கும் நிலையில் மத்திய அரசின் பதில்

அமெரிக்க அறிக்கை சர்ச்சை

வாஷிங்டனில் செயல்படும் USCIRF வெளியிட்ட சமீபத்திய அறிக்கை இந்தியாவில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சில சமூகங்களில் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

RSS, R&AW குறித்து பரிந்துரை அறிக்கையின் முக்கிய அம்சமாக,
RSS மற்றும் R&AW மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைரைக்கப்பட்டுள்ளது. மத சுதந்திரம் ததொடர்பான பிரச்சனைகளில் இந்த அமைப்புகளின் பங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத சுதந்திரம் குறித்து குற்றச்சாட்டு இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்றும், சில இடங்களில் மத அடிப்படையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும், மதமாற்றம் ததொடர்பான சட்டங்கள் கடுமை மை யாக்கப்பட்டிருப்பதும், அதன் விளைவாக சிலர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமா?

USCIRF தனது பரிந்துரையில், இந்தியாவை “கவலைக்குரிய நாடுகள்” பட்டியலில்  சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அததோடு, மத சுதந்திர நிலையை  கருத்தில் கொண்டு அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசின் கடும் பதில்

இந்த அறிக்கைக்கு இந்திய அரசு உடனடியாக எதிர்வினை தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை சார்பில் பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், இந்த அறிக்கை பாரபட்சமானது என்றும் உண்மையை பிரதிபலிப்பதில்லை என்றும் கூறினார். இந்தியாவை தவறாக சித்தரிக்கும் முயற்சி இது எனவும் அவர் வலியுறுத்தினார்.

‘முதலில் உங்கள் நாட்டைப் பாருங்கள்’ அமெரிக்கா இந்தியாவை விமர்சிப்பதற்குப் பதிலாக, தங்களது நாட்டில் நடைபெறும் சமூக மற்றும் மத சம்பவங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. குறிப்பாக, அங்குள்ள இந்து கோயில்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் அறிக்கை மூலம் கவலை தெரிவிக்கப்படும் நிலையில், மறுபக்கம் இந்தியா அதை மறுத்து பதிலடி கொடுத்துள்ளது. இந்த விவாதம் எதிர்காலத்தில் மேலும் அரசியல் மற்றும் தூதரக மட்டத்தில் பேசப்படும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை