Homeசெய்திகள்திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.60,000 வரை சம்பளம்!

திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.60,000 வரை சம்பளம்!

திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தை பார்ப்போம்.

தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. குறிப்பாக, மாவட்ட ரீதியாக பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: எந்தெந்த பணியிடங்கள்?

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. இவை முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 6ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம் : திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, மருத்துவ அதிகாரி, நகர்ப்புற சுகாதார செவிலியர், லேப் டெக்னீஷன், சுகாதார ஆய்வாளர், ஆலோசகர், ஸ்டாஃப் நர்ஸ், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் / துணைப் பணியாளர், தூய்மை பணியாளர், காவலாளி, சுகாதாரப் பணியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு என்ன வாய்ப்பு?

கல்வித்தகுதி – இந்த பணியிடங்களை பொறுத்தவரை ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி மாறும். அந்த வகையில், ஓட்டுநர் பணிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி படித்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். dental assistant பணிக்கு 8ஆம் வகுப்பு மற்றும் பல் மருத்துவத்தில் அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. multi task worker 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். sanitary worker பணிக்கும் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், cleaner, security, multi purpose hospital worker பணிகளுக்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

மாத சம்பளம் – மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பணிக்கு வேறுபடும். அந்த வகையில், sanitary worker, security, cleaner, multi purpose worker ஆகிய பணிகளுக்கு மாதம் ரூ.8500 சம்பளம் வழங்கப்படும். ஓட்டுநர், dental assistant பணிக்கு மாதம் ரூ.13500 வழங்கப்படும். இப்படியாக ஒவ்வொரு பணிக்கும் மாத சம்பளம் மாறுபடும். மாத சம்பளம் தொடர்பாக முழுமையாக அறிவிப்பை tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை – மேற்கண்ட பணிக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுபவார்கள். இந்த பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

துறை சுகாதாரத்துறை
பணியிடம் திருநெல்வேலி
காலிப் பணியிடங்கள்
80
மாத சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.8500 வரை சம்பளம்
கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கல்வித்தகுதி பணிக்கு ஏற்ப மாறுபடும்
விண்ணப்பிக்கும் முறை Tirunelveli.nic.in
விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 5 வரை
நிபந்தனைகள்
திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்படும் பணிக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள். இப்பணியிடங்கள் எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
திருநெல்வேலி மாவட்டத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து உரிய முகவரிக்கு ஜூன் 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாவட்ட சுகாதார அலுவலகம், எண்.16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, சமாதானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
விண்ணப்ப படிவத்துடன் பிறப்பு சான்றிதழ், 10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், முகவரிச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், அனுபவ சான்று போன்றவற்றை விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article
Next article
*சென்னை தலைமைச் செயலக வளாகத்தை பேட்டரி வாகனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் விஜய்* தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று தனது வழக்கமான அலுவல் பணிகளை முடித்த கையோடு, சென்னை தலைமைச் செயலக வளாகத்தை பேட்டரி வாகனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் விஜய்யின் இந்தத் திடீர் விசிட், தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கோட்’ கழற்றிவிட்டு விஜய் ஆய்வு முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு வரும் போது கோட் அணிந்து கம்பீரமாக வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று மாலை, கோட்டை வளாகத்தை வலம் வருவதற்காகத் தனது சட்டை மேல் அணிந்திருந்த கோட்டை கழற்றிவிட்டு, பேட்டரி காரில் ஏறினார். ஸ்டைலாக கூலர்ஸ் அணிந்து பயணித்தார். தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் இருந்து புறப்பட்ட அவர், கோட்டை வளாகத்தில் உள்ள பல்வேறு முக்கியப் பகுதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்ட விஜய் பழமையும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்துள்ள பல முக்கிய இடங்களை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்: கோட்டை அருங்காட்சியகம் (Museum): பிரிட்டிஷ் காலத்து வரலாற்று ஆவணங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மியூசியம் பகுதியைச் சுற்றிப் பார்த்தார் விஜய். செயிண்ட் மேரிஸ் தேவாலயம் (St. Mary’s Church): ஆசியாவிலேயே பழமையான ஆங்கிலேயக் கட்டுமானங்களில் ஒன்றான, கோட்டை வளாகத்தில் உள்ள புனித மேரி தேவாலயத்திற்குச் சென்று அதன் அமைப்பைப் பார்வையிட்டார். ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள்: கோட்டையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளைப் பேட்டரி காரில் சென்றபடியே உற்று நோக்கினார். இதனுடன், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கும் கட்டிடப் பிரிவுகளுக்கும் சென்று அங்கிருந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கவனித்தார். குவியத் தொடங்கிய ஊழியர்கள் முதலமைச்சர் விஜய் பேட்டரி காரில் தலைமைச் செயலக வளாகத்தை வலம் வருகிறார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களின் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு வளாகப் பகுதிகளில் குவியத் தொடங்கினர். உற்சாக வரவேற்பு பேட்டரி காரில் புன்னகையுடன் கைகளை அசைத்தபடி வந்த முதலமைச்சர் விஜய்க்கு, ஊழியர்களும் தொண்டர்களும் கைதட்டியும், வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊழியர்கள் பலரும் தங்களது மொபைல் போன்களில் முதலமைச்சரின் இந்த விசிட்டை புகைப்படம் மற்றும் வீடியோக்களாகப் பதிவு செய்து மகிழ்ந்தனர். தலைமைச் செயலகத்தில் வழக்கமாக இருக்கும் இறுக்கமான அரசியல் சூழலை மாற்றி, ஊழியர்களுடன் மிகவும் இயல்பாக முதலமைச்சர் விஜய் கலந்துரையாடிய இந்த ‘கோட்டை உலா’ தற்போதைய தலைமைச் செயலக வட்டாரத்தில் மிகவும் சுவாரசியமாகப் பேசப்பட்டு வருகிறது. 35 அமைச்சர்கள் பதவியேற்பு மே 10 அன்று முதலமைச்சர் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், மே 21 அன்று நடைபெற்ற விரிவாக்கத்தில் காங்கிரஸ் மற்றும் தவெக-வைச் சேர்ந்த மேலும் 23 எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்று விசிக, ஐ.யு.எம்.எல் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த இடங்களான 35-ம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.
அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை