Homeசெய்திகள்தமிழக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளைக்கு 17 பேர் நியமனம்!

தமிழக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளைக்கு 17 பேர் நியமனம்!

தமிழக அரசு சார்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதற்காக 17 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களாக ஆர்.கவுரி, ஜி. தன மாத்ரி, முகமது பயாஸ் அலி, எம்.சிவவர்த்தனன், எம்.குருபிரசாத், அமிர்த பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தர், டோமினிக் எஸ்.டேவிட், ஆர்.சக்கரவர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில அரசு ப்ளீடர்கள் என்ற அந்தஸ்தில் செயல்படுவார்கள்.

இதேபோல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்களாக பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆர்.பார்திபன், ஐ.பினய்காஷ், எஸ்.சிவசுப்ரமணியன், எஸ்.சிவ திலகர், கே.பொற்கொடி ஆகியோர் அரசு ப்ளீடர்கள் என்ற அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனின் பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிமுறைகளின்படி, நிரந்தர அரசு வழக்கறிஞர்கள் முறையாக நியமிக்கப்படும் வரை, இவர்கள் அரசு சார்பில் ஆஜராகி வாதிடுவார்கள் என தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை