Homeஅரசியல்தமிழக தேர்தல் 2026 வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: முழுப் பட்டியல் & அதிரடி முடிவுகள்!

தமிழக தேர்தல் 2026 வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: முழுப் பட்டியல் & அதிரடி முடிவுகள்!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய திருப்புமுனை இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக மக்கள் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி வாக்களித்திருப்பது தற்போதைய நிலவரப்படி தெளிவாகத் தெரிகிறது.

ஆச்சிரியத்தில் ஆழ்த்திய தமிழக வெற்றிக் கழகம்!

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் அரசியலில் இறங்கிய முதல் தேர்தலிலேயே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளார்.

மதிய நிலவரப்படி வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை விட விஜய் தலைமையிலான TVK கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய தொகுதிகளின் நேரலை நிலவரம்:

பெரம்பூர்:

கட்சித் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்கள் பெரம்பூர் தொகுதியில் அமோக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கொளத்தூர்:

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் கடும் போட்டியைச் சந்தித்து வருகிறார்.

எடப்பாடி:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் எடப்பாடி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.

காட்பாடி (சுற்று 1 நிலவரம்):

காட்பாடி தொகுதியில் நிலவும் கடும் போட்டியில் அதிமுக வேட்பாளர் வி. ராமு முன்னிலை வகிக்கிறார். இவரைத் தொடர்ந்து திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் மற்றும் தவெக வேட்பாளர் டாக்டர் எம். சுதாகர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அதிரடி காட்டும் தவெக வேட்பாளர்கள்:

சென்னை முதல் குமரி வரை தவெக வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக:

ஆவடி: ஆர். ரமேஷ் குமார் (TVK) முன்னிலை.

திருவள்ளூர்: டாக்டர் டி. அருண்குமார் (TVK) முன்னிலை.

பொன்னேரி: டாக்டர் ரவி M.S (TVK) முன்னிலை.

திருச்சி மேற்கு: தவெக வேட்பாளர் முன்னிலை பெற்று திமுகவின் கோட்டையிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மதிய நேர நிலவரம் (தோராயமாக):

தமிழக வெற்றிக் கழகம் (TVK): 100+ இடங்கள்

அதிமுக+ (AIADMK+): 60+ இடங்கள்

திமுக+ (DMK+): 40+ இடங்கள்

ஒரு புதிய விடியலை நோக்கி தமிழகம்?

மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து களமிறங்கிய விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு பெருகியுள்ளதாகத் தெரிகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மாற்றத்தை விரும்பும் மக்களின் வாக்குகளே இந்த முன்னிலைக்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மாலைக்குள் முழுமையான முடிவுகள் வெளியாகும் போது, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது உறுதியாகிவிடும். இருப்பினும், தற்போதைய நிலவரப்படி “தமிழக வெற்றிக் கழகம்” ஒரு வரலாற்றுச் சாதனை வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.

தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவுகளுக்காகக் காத்திருங்கள். தகவல்கள் மாற்றத்திற்கு உள்ளாகலாம்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை