Homeசெய்திகள்முதலிரவில் மனைவி சொன்ன வார்த்தை; அதிர்ந்து போய் கணவன் செய்த காரியம்!

முதலிரவில் மனைவி சொன்ன வார்த்தை; அதிர்ந்து போய் கணவன் செய்த காரியம்!

உத்திர பிரதேசம் மாநிலம் அமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மிதிலேஷ் குமாரி. இவரது பெற்றோர்கள் இவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். ஆனால், குமாரி இந்த திருமணத்திற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும், தான் ஒரு இளைஞரைக் காதலித்து வருவதாகவும், அந்த இளைஞரைத் தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் பெற்றோர்களிடம் தெரிவித்தார். ஆனால், அவரது பெற்றோர்கள் இந்த காதலை ஏற்கவில்லை.

அதனால், தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருக்கு இவரைத் திருமணம் பேசி முடித்துள்ளனர். இதையடுத்து, இவர்களுக்குத் திருமண நிச்சயத்தர்தம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெறு வந்தது. ஆனாலும், தொடர்ச்சியாகத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று குமாரி தெரிவித்து வந்தார். ஆனாலும், அவரது பெற்றோர்கள் இந்த இவர் சொல்வதைப் பொருட்படுத்தவில்லை.

பிடிவாதமாகத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறிவந்த குமாரியை அவரது பெற்றோர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்கும்படி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவரை மிரட்டி, கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். திருமண சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், மணமக்கள் முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது கணவர் சிங்கிடம், குமாரி தனக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாகவும், தான் அவரையே திருமண செய்ய விரும்பியதாகவும் கூறினார். மேலும், பெற்றோர்கள் தன்னை கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தைச் செய்துவைத்ததாகவும் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிங், என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தார். பின்பு, குமாரியின் மனநிலையைப் புரிந்து கொண்டு, இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று யோசித்தார். பின்பு, குமாரியின் சூழ்நிலை குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர், இது குறித்து ஆமிர்பூர் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, விசாரணை நடத்திய காவல்துறையினர், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையின் மூலமாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி அறிவுறுத்தினார். இதில், குமாரி தன் காதலுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், இரு வீட்டாரும் மணமக்களுக்கு விவாகரத்து செய்து வைக்கும் முடிவிற்கு வந்தனர். இதையடுத்து, இந்த திருமணம் ஒரே நாளில் முடிவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருமணத்திற்கு முன்பாகவே தன்னிடம் தெரிவித்திருந்தால், இரு குடும்பத்தாருக்கும் இந்த சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்று மணமகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை