Homeசினிமா புதுப்பிப்புகள்திரையரங்கு டிக்கெட் விலை உயர்வு: முதல்வர் விஜயை சந்தித்த உரிமையாளர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!

திரையரங்கு டிக்கெட் விலை உயர்வு: முதல்வர் விஜயை சந்தித்த உரிமையாளர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!

விஜய் தமிழ்நாட்டு முதல்வராக பதவியேற்றிய நாளில் இருந்து பல துறையினர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். முதல்வரை சந்திக்கும் பெரும்பாலான தொழிற்துறையினர் முந்த ஆட்சியின் கொள்கை தொடர்ச்சியை தான் முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளனர். இதேவேளையில் சில துறையினர் முக்கிய மாற்றங்கள் நடக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

திரையரங்கு டிக்கெட் விலை உயர்வு: உரிமையாளர்கள் என்ன கோரிக்கை வைத்தனர்?

இதில் முக்கியமாக தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட டிக்கெட் விலையை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முதல்வர் விஜய் சினிமா துறையில் இருந்து வந்திருக்கும் காரணத்தால் இந்த முக்கிய கோரிக்கைக்கு எத்தகைய முடிவை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முக்கிய சந்திப்பு
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இந்த சந்திப்பில் திரையரங்கு தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய தீர்வுகள் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டண உயர்வு
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், ஒவ்வொரு திரைப்படத்தின் தரம் மற்றும் செலவுக்கு ஏற்றவாறு டிக்கெட் விலையை 250 ரூபாய்க்குள் மாற்றிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள், தற்போது 188 ரூபாயாக உள்ள டிக்கெட் விலையை 200 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த உயர்வு திரையரங்குகளின் இயக்க செலவுகளை ஈடுகட்ட உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

திரையரங்கு டிக்கெட் விலை உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பா?

மேலும், திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் உள்ளூர் பொழுதுபோக்கு வரியை முழுமையாக நீக்க வேண்டும், திரையரங்குகளை புதுப்பிக்க அனுமதி வழங்கும் ஜி-ஃபார்ம் அனுமதியை எளிதாக்க வேண்டும் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் தமிழ்நாட்டில் திரையரங்கு தொழிலை நீண்டகாலம் தக்கவைக்கவும், தரமான பொழுதுபோக்கை மக்களுக்கு வழங்கவும் உதவும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கினர்.

முதல்வர் விஜய்
முதலமைச்சர் இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாக கேட்டறிந்து, தேவையான கருத்துக்களை பெற்று, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார்.

டிக்கெட் விலை உயர்ந்தால் சாமானிய மக்கள், குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கும் மக்களும், ரசிகர்களுக்கும், இந்த விலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே OTT தளம் திரையரங்கு வர்த்தகத்தை பாதித்து வரும் வேளையில் இந்த கட்டண உயர்வு மக்கள் வருகையை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

திரையரங்குகள் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே புதிய படங்களை தரமான முறையில் அனுபவிக்க முடியும் என்ற அடிப்படையில் திரையரங்குகள் சங்கம் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

Previous article
*சென்னை தலைமைச் செயலக வளாகத்தை பேட்டரி வாகனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் விஜய்* தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று தனது வழக்கமான அலுவல் பணிகளை முடித்த கையோடு, சென்னை தலைமைச் செயலக வளாகத்தை பேட்டரி வாகனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் விஜய்யின் இந்தத் திடீர் விசிட், தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கோட்’ கழற்றிவிட்டு விஜய் ஆய்வு முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு வரும் போது கோட் அணிந்து கம்பீரமாக வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று மாலை, கோட்டை வளாகத்தை வலம் வருவதற்காகத் தனது சட்டை மேல் அணிந்திருந்த கோட்டை கழற்றிவிட்டு, பேட்டரி காரில் ஏறினார். ஸ்டைலாக கூலர்ஸ் அணிந்து பயணித்தார். தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் இருந்து புறப்பட்ட அவர், கோட்டை வளாகத்தில் உள்ள பல்வேறு முக்கியப் பகுதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்ட விஜய் பழமையும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்துள்ள பல முக்கிய இடங்களை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்: கோட்டை அருங்காட்சியகம் (Museum): பிரிட்டிஷ் காலத்து வரலாற்று ஆவணங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மியூசியம் பகுதியைச் சுற்றிப் பார்த்தார் விஜய். செயிண்ட் மேரிஸ் தேவாலயம் (St. Mary’s Church): ஆசியாவிலேயே பழமையான ஆங்கிலேயக் கட்டுமானங்களில் ஒன்றான, கோட்டை வளாகத்தில் உள்ள புனித மேரி தேவாலயத்திற்குச் சென்று அதன் அமைப்பைப் பார்வையிட்டார். ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள்: கோட்டையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளைப் பேட்டரி காரில் சென்றபடியே உற்று நோக்கினார். இதனுடன், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கும் கட்டிடப் பிரிவுகளுக்கும் சென்று அங்கிருந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கவனித்தார். குவியத் தொடங்கிய ஊழியர்கள் முதலமைச்சர் விஜய் பேட்டரி காரில் தலைமைச் செயலக வளாகத்தை வலம் வருகிறார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களின் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு வளாகப் பகுதிகளில் குவியத் தொடங்கினர். உற்சாக வரவேற்பு பேட்டரி காரில் புன்னகையுடன் கைகளை அசைத்தபடி வந்த முதலமைச்சர் விஜய்க்கு, ஊழியர்களும் தொண்டர்களும் கைதட்டியும், வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊழியர்கள் பலரும் தங்களது மொபைல் போன்களில் முதலமைச்சரின் இந்த விசிட்டை புகைப்படம் மற்றும் வீடியோக்களாகப் பதிவு செய்து மகிழ்ந்தனர். தலைமைச் செயலகத்தில் வழக்கமாக இருக்கும் இறுக்கமான அரசியல் சூழலை மாற்றி, ஊழியர்களுடன் மிகவும் இயல்பாக முதலமைச்சர் விஜய் கலந்துரையாடிய இந்த ‘கோட்டை உலா’ தற்போதைய தலைமைச் செயலக வட்டாரத்தில் மிகவும் சுவாரசியமாகப் பேசப்பட்டு வருகிறது. 35 அமைச்சர்கள் பதவியேற்பு மே 10 அன்று முதலமைச்சர் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், மே 21 அன்று நடைபெற்ற விரிவாக்கத்தில் காங்கிரஸ் மற்றும் தவெக-வைச் சேர்ந்த மேலும் 23 எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்று விசிக, ஐ.யு.எம்.எல் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த இடங்களான 35-ம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.
Next article
அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை