தமிழகத்தில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டது. அதாவது, மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் போன்ற திட்டங்களை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.
பெண்கள் இலவச பேருந்து திட்டம்: அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம் எப்போது?
இதில், மகளிர் விடியல் பயணத் திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியான திட்டமாக இருக்கிறது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதை அடுத்து, முதல் கையெழுத்தாக ஸ்டாலின் போட்டார். மகளிர் விடியில் பயண திட்டம் மூலம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். நகரப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை, நடுத்தர, வேலைக்கு செல்லும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மாதந்தோறும் சுமார் ரூ.888 வரை அவர்களால் சேமிப்பு முடிக்கிறது. இந்த திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த மாநிலங்களில் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
தவெக தேர்தல் வாக்குறுதி
இந்த நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் இலவச பேருந்து திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து வாக்குறுதியாக வெளியிட்டது. அதாவது, வெற்றி பயணத்திட்டம் மூலம் தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்திற்கும் பெண்கள் அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணிக்கலாம் என தவெக வாக்குறுதியாக அளித்தது.
தற்போதுள்ள இலவச பேருந்து திட்டத்தின் மூலம், சாதாரண உள்ளூர் பேருந்துகளில் தான், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். தற்போது தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் முக்கியமான அப்டேட் கொடுத்தளளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழன் பார்த்திபனிடம் தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி கொடுத்தப்படி, மாநிலம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் பெண்குளுக்கான இலவச பயணத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பதிலளித்த அமைச்சர் தமிழன் பார்த்திபன், “பெண்கள் இலவச பேருந்து திட்டம் தொடர்பான பணிகள் தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. கூடிய விரையில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து முதல்வர் விஜய் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. தமிழகத்தில் எந்தெந்த பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணிக்கலாம்?
தற்போது இயக்கப்படும சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், டீலக்ஸ், ஏசி உள்ளிட்ட பேருந்துகளில் இந்த சலுகை இல்லை.
2. தவெகவின் வெற்றிப் பயணத் திட்டம் என்றால் என்ன?
தவெக தேர்தல் வாக்குறுதியாக அளித்த அறிவித்த திட்டமே ’பெண்கள் வெற்றிப் பயணத் திட்டம்’. இந்த திட்டம் மூலம் பெண்கள் எந்த பகுதிகளில் இருந்தும் எந்த அரசு பேருந்துகளிலும் இலவசமாக பெண்கள் பயணிக்கலாம்.
3. அனைத்து அரசு பேருந்துகளில் பெண்களுக்கு எப்போது இலவச பயணம்?
போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம் கூறுகையில், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் விரைவில் இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

