ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நாளை குவாளிபையர் 1ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில், இப்போட்டியில் ஆர்சிபி அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
2026 ஐபிஎல் தொடர் தற்போது பிளே ஆஃப் சுற்றை எட்டி இருக்கிறது. லீக் சுற்று மிகவும் சுவாரஸ்யமாக சென்ற நிலையில், அதில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப்-க்கு முன்னேறியது. இந்த சூழலில், நாளை மற்றும் நாளை மறுநாள் குவாளிபையர் 1 & 2 நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், குவாளிஃபையர் 1ல் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோத உள்ளன. இப்போட்டி தர்மசலா மைதானத்தில் நாளை (மே 26) மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், ஆர்சிபி அணியின் பிளேயிங் 11ல் மாற்றம் ஏற்பட இருக்கிறது.
ஜேக்கப் பெத்தேல் விலகல்
ஆர்சிபி அணியின் அதிரடி வீரராக விளையாடி வந்த ஜேக்கப் பெத்தேல், தனது மோதிட விரலில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் இத்தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெத்தேல் விளையாடவில்லை என்றாலும், நடக்கவிருக்கும் ராஜதான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணிக்குள் கொண்டுவர வாய்ப்பிருந்தது. ஆனால், கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2026 ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பெத்தேல் விலகி மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்து திரும்பி உள்ளார்.
ஆர்சிபி பிளேயிங் 11ல் என்ன மாற்றம்?
RR அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் ஆர்சிபி அணிக்காக ஃபில் சால்ட் களமிறங்குவார் என தெரிகிறது. சால்ட் கடந்த சில போட்டிகளில் விளையாடாத நிலையில், அவர் இப்போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது. இவர் பிளேயிங் 11ல் உள்ளே வரும் பட்சத்தில் வெங்கடேஷ் ஐயர் மீண்டும் நடுவரிசைக்கு தள்ளப்படுவார்.
கடந்த போட்டியில் தோல்வி
ஆர்சிபி அணி SRH-க்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியடைந்தது. கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்து பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் பெங்களூரு அணி விளையாட இருப்பதால், அந்த அணியின் ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்று தனது முதல் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணி இம்முறையும் வென்று இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என குறிக்கோளுடன் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
RCB vs RR Qualifier 1: ஆர்சிபி பிளேயிங் 11 vs ராஜஸ்தான் ராயல்ஸ்
விராட் கோலி, ஃபில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட். இம்பேக்ட் வீரர்: ரசிக் சலாம் தர்.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் 11
சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், ராகுல் தெவாடியா, ககிசோ ரபாடா, அர்ஷத் கான், முகமது சிராஜ். இம்பேக்ட் வீரர்: பிரசித் கிருஷ்ணா

