Homeசெய்திகள்மாதம் ரூ 1750 உதவித்தொகை: இந்த அரசு கல்லூரியில் சேர்ந்தால் வங்கி கணக்கில் நேரடி வரவு!

மாதம் ரூ 1750 உதவித்தொகை: இந்த அரசு கல்லூரியில் சேர்ந்தால் வங்கி கணக்கில் நேரடி வரவு!

அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்தால் மாதம் ரூ.1750 உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதனை எப்படி பெறுவது என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தமிழக அரசு பலதரப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்காக உதவித் தொகையுடன் கூடிய மாணவர் சேர்க்கையை கல்லூரிகளில் நடத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், சென்னை -600050ல் தொழிற் பிரிவுகளின் இருக்கைகளை நிரப்புவதற்கு skilltraining.tn.gov.in/detitiadm/ என்ற இணையதளம் வாயிலாக (Online Admission) சேர்க்கை நடைப்பெற்று வருகிறது.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சி அளிக்கப்படும் தொழிற் பிரிவுகளின் விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் மற்றும் தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எப்படி பெறலாம்?
விண்ணப்பதாரர்கள் 8th/10th மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-5 ஆகியவற்றை நேரில் எடுத்து வர வேண்டும். சேர்க்கை கட்டணம் ஓர் ஆண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.235 மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.245 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழிற் பிரிவுகள்

தையல் தொழில் நுட்பம்

கோபா, அழகு சாதனவியல், (Cosmetology), Stenography DOTE (Tamil & English) கட்டிடப் பட வரைவாளர்
பயிற்சி காலம் 1 வருடம் 1 வருடம் 2 வருடம்
கல்வித்தகுதி 8 ஆம்
வகுப்பு தேர்ச்சி. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 10 ஆம்
வகுப்பு தேர்ச்சி
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9444017528 / 9629666279 9840385562/ 9566058460 / 6381682005 என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பச்சிளம் குழந்தை கடத்தல்.. கோவையை தொடர்ந்து சென்னையிலும் ஷாக்! நடந்தது என்ன?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் யார் விண்ணப்பிக்கலாம்?
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்த பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும்?
பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும்.
மாணவிகளுக்கு கூடுதலாக ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.

3. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?
8,10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல் மற்றும் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை