Homeசெய்திகள்தங்கம் விலை இன்று திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.400 குறைவு - இன்றைய முழு ரேட்...

தங்கம் விலை இன்று திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.400 குறைவு – இன்றைய முழு ரேட் இதோ!

தங்கம் விலை (Gold price) இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

தங்கம் விலை இன்று: சென்னையில் எவ்வளவு குறைந்தது?

தங்கம் விலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. அடுத்த ஒரே ஆண்டில் ரூ.97 ஆயிரம் என்ற அளவுக்கு அதிரடியாக உயர்ந்தது. தற்போதும் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பிப்ரவரி மாதத்தில் ஒரு சவரன் ரூ.1.25 ஆயிரத்தையும் தாண்டி விற்பனை ஆனது.

சட்டென சரிந்த தங்கம் விலை
ஆனால் அதன்பிறகு தங்கம் விலை சரியத் தொடங்கியது. குறிப்பாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சமயத்தில் தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,10,480-க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது.

85%க்கு மேல் வரி.. கணக்கில் வராத தங்கம் வைத்திருந்தால் மொத்தமாக போய்டும்.. இந்த ரூல்ஸ் தெரியுமா!
இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் ரூ.8 ஆயிரம் உயர்ந்தும் அதிர்ச்சி அளித்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,18,340-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சட்டென சரிந்துள்ளது.

தங்கம் விலை இன்று குறைய காரணம் என்ன?

இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டப்புன்னு சரிய போகுது தங்கம் விலை.. கோல்டு வாங்க போறீங்களா? ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய மேட்டர்!
சென்னையில் வெள்ளி விலை இன்று எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து இருப்பது, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
23-05-2026 – ஒரு சவரன் ரூ.1,17,840
22-05-2026 – ஒரு சவரன் ரூ.1,18,240
21-05-2026 – ஒரு சவரன் ரூ.1,18,480
20-05-2026 – ஒரு சவரன் ரூ.1,18,000

19-05-2026 – ஒரு சவரன் ரூ.1,18,960
18-05-2026 – ஒரு சவரன் ரூ.1,18,000
17-05-2026 – ஒரு சவரன் ரூ.1,18,000
16-05-2026 – ஒரு சவரன் ரூ.1,18,000

15-05-2026 – ஒரு சவரன் ரூ.1,18,120
14-05-2026 – ஒரு சவரன் ரூ.1,20,400
13-05-2026 ஒரு சவரன் ரூ.1,23,200
12-05-2026 ஒரு சவரன் ரூ. 1,14,640

11-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
10-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
09-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
08-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200

07-05-2026- ஒரு சவரன் ரூ.1,13,200
06-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,800
05-05-2026- ஒரு சவரன் ரூ.1,10,560
04-05-2026- ஒரு சவரன் ரூ.1,12,000

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை